×

உலக நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு சித்தூர் மாவட்டத்தில் 12 ஆயிரம் ரேபீஸ் தடுப்பூசி மருந்துகள் தயார்

*ஆயிரம் நாய்களுக்கு செலுத்தப்பட்டது

சித்தூர் : உலக நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு சித்தூர் மாவட்டத்தில் 12 ஆயிரம் ரேபிஸ் தடுப்பூசி மருந்துகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 6ம் தேதி உலக ரேபீஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1985ம் ஆண்டு லூயிஸ் பவுச்சர் என்பவர் முதன் முதலில் கால்நடைகளுக்கு பரவக் கூடும் ரேபிஸ் நோயை கண்டுபிடித்தார். ஏராளமான கால்நடைகளுக்கு அதாவது நாய், பூனை, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் வந்தன.

இந்த நோய்களுக்கு தீர்வு காணும் லூயிஸ் பவுசர் என்பவர் சோதனை மேற்கொண்டார். அவருடைய ஆய்வின்போது அவர் கண்டுபிடித்த ரேபீஸ் மருந்தை மனிதன் உடலில் செலுத்தி மனிதனுக்கு அந்த மருந்து வெற்றிகரமாக செயல்பட்டதால் அந்த மருந்தை கால்நடைகளுக்கு போட்டால் கால்நடைகளுக்கு கேன்சர் டிபி இரும்பல் அரிப்பு உள்ளிட்ட நோய்கள் வராமல் இருக்கும். ஆகவே அவர் கண்டுபிடித்த மருந்தை ரேபிஸ் என்று பெயரிட்டு அவரின் சோதனை வெற்றிகரமாக முடிந்த தினமான 1955 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 தேதி ரேபீஸ் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சித்தூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உலக ரேபீஸ் நோய் தினத்தை முன்னிட்டு ஆயிரம் நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டது. இதுகுறித்து கால்நடை துறை மாவட்ட அதிகாரி பிரபாகர் பேசியதாவது: சித்தூர் மாவட்டத்திலும் உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினத்தை கடைப்பிடித்து வருகிறோம். சித்தூர் மாவட்டம் முழுவதும் 14 கால்நடை மருத்துவங்களில் மற்றும் 64 கால்நடை துணை மருத்துவங்களில் அந்தந்த பகுதியில் உள்ள நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

சித்தூர் மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரம் ரேபிஸ் தடுப்பு ஊசி மருந்துகள் தயாராக உள்ளது. ஆகவே அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரவர்களின் வீட்டில் வளர்க்கும் நாய் மற்றும் பூனை உள்ளிட்டவை அழைத்துச் சென்று அவற்றுக்கு ரேபிஸ் தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.

இதில் மாவட்ட சுகாதாரத்துறை பொறுப்பு அதிகாரி பிரபாவதி, கால்நடை மருத்துவர்கள் திரிஷா,  வாணி, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி லோகேஷ் உள்பட ஏராளமான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் சித்தூர் மாநகரம் முழுவதும் ஆயிரம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மருந்து இலவசமாக போடப்பட்டது.

The post உலக நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு சித்தூர் மாவட்டத்தில் 12 ஆயிரம் ரேபீஸ் தடுப்பூசி மருந்துகள் தயார் appeared first on Dinakaran.

Tags : Chittoor district ,World Disease Prevention Day ,Chittoor ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும்...